Extra Income in Coconut 🌴 Business | Develop Your Coconut 🌴 Business | Business Tips Tamil | Small Business Ideas | The Money 4 U | Coconut Business Tamil


Coconut Business வருமானத்தை அதிகப்படுத்த மேலும் சில வழிகள் இருக்கின்றன அவைகள் என்ன என்பதை பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.



வருடம் முழுவதும் மிகவும் எளிமையாகவும் அதிகமாகவும் வருமானம் தரக்கூடிய தொழில்களில் இந்த Coconut Business குறிப்பிடத்தக்கதாகும் இதனைப் பற்றிய ஒரு தொகுப்பானது ஏற்கனவே நமது Website ல் Post இடப்பட்டுள்ளன இதுவரை நீங்கள் அந்த Post பார்க்கவில்லை எனில் இத்துடன் அதற்கான Link கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் இந்த Business ல் எத்தனை வகையான வருமானங்கள் கிடைக்கின்றன என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் மேலும் இத் தொழிலில் வருமானம் அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய விளக்கங்களை இத்துடன் நாங்கள் உங்களுக்கு கொடுக்கப் போகிறோம்.

இந்த தொழிலில் ஏற்கனவே மூன்று வகையான வருமானங்களை பற்றிய தெளிவான விளக்கங்களை நாம் பார்த்துள்ளோம் மேலும் இத் தொழிலில் கிடைக்கும் மற்றொரு வருமானத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம் இந்த தொழிலானது அனைத்து காலங்களிலும் செய்யமுடியும் அதேபோல் இதற்கு அதிக வரவேற்பும் மக்களிடையே உள்ளன அதனால் இதன் மூலமாகவும் நாம் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும்.

நான்காவது வருமானமாக இளநீர் விற்பதன் மூலமாக மேலும் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது இளநீர் ஆனது வெய்யில் காலங்களில் அதிகமாக விற்கப்படும் குளிர்பானம் ஆக உள்ளன மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை பானம் என்பதால்  இதற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது ஒரு இளநீர் இன்றைய விலையானது 35 முதல் ரூபாய் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதன் மூலமாக ஒரு நாளில் அதிகபட்சமாக 5,000 வரை வருமானம் ஈட்ட முடியும்.

ஒரு மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலாக இளநீர்களை விற்பதன் மூலமாக ஒரு மாதத்திற்குள் நாம் பல லட்சங்கள் வருமானமாக ஈட்ட முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது இத் தொழிலில் நஷ்டம் என்பது மிகவும் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு குடும்பத்தினர் அவர்கள் விவசாயம் செய்து வரும் தொழிலில் தென்னை மரங்களை சாகுபடி செய்து அதில் மற்ற விளைச்சல்களோடு சேர்ந்து விவசாயம் செய்வதோடு தென்னை மரங்களில் மட்டும் அவர்கள் மாதம்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேலாக வருமானங்களை ஈட்டிக் கொண்டு உள்ளனர் மேலும் இதில் அவர்கள் முழுவதுமாக தொழில்ரீதியான நோக்கத்தோடு செய்யவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது மற்ற பணிகளை செய்யும் வேலையில் அதோடு பொழுதுபோக்கிற்காக இத் தொழிலைச் செய்வதால் ஒரு லட்சத்திற்கும் மேலாக வருமானம் ஈட்டுகிறார்கள் இதை நாம் ஒரு தொழிலாக எடுத்து செய்வதன் மூலமாக பல லட்சங்கள் ஈட்ட முடியும் என்பதே உண்மை.



ஒரு தொழிலில் குத்தகை எடுப்பதன் மூலமாக பல வருமானங்கள் கிடைப்பதென்பது மிகவும் சாத்தியமற்ற ஒன்றாகும் ஆனால் தென்னை மர தோட்டங்களை குத்தகைக்கு எடுப்பதன் மூலமாக நாம் வருடந்தோறும் பல விதமான வருமானம் ஈட்ட முடியும் என்பதே நிதர்சனமான உண்மை மேலும் வருடம் தோறும் மாதக் கணக்கிலும் நாட்கள் கணக்கிலும் வருமானம் ஈட்ட முடியும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இத் தொழிலை தொடங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு மற்றும் இத்தொழிலை பற்றிய விவரங்களையும் பலன்களையும் தெரிந்துகொள்ள புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள அந்த கிராமத்தில் உள்ள குடும்பத்தாரிடம் நேரடியாக சென்று வியாபார ரீதியான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இளநீர் விற்பதில் கிடைக்கும் வருமானத்தைப் பற்றியும் புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள அந்த குடும்பத்தினர் செய்துவரும் தொழில் ரீதியான விளக்கங்கள் அடங்கிய இரண்டு Video இத்துடன் இணைத்துள்ளோம் தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்ள அந்த Video பார்ப்பதன் மூலம் உங்களுக்கு மேலும் பயன்படும்.

மேலும் இது போன்ற சிறு தொழில்கள் மற்றும் பெரிய தொழில்களை பற்றி தெரிந்து கொள்ள எங்கள் Full Website தொடர்பு கொள்ளவும்.


Visit Our Full Website : Click Here

Extra Income in Coconut 🌴 Business | Develop Your Coconut 🌴 Business | Business Tips Tamil | Small Business Ideas | The Money 4 U | Coconut Business Tamil Extra Income in Coconut 🌴 Business | Develop Your Coconut 🌴 Business | Business Tips Tamil | Small Business Ideas | The Money 4 U | Coconut Business Tamil Reviewed by Suresh Kumar on 9:02 AM Rating: 5

No comments:

Powered by Blogger.